மட்டக்களப்பு - ஆரையம்பதி அருள்மிகு ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013

மட்டக்களப்பு
- ஆரையம்பதி
அருள்மிகு ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~
2013

ஆரம்பம் - 2013.07.27 {சனிக்கிழமை } நிறைவு - 2013.08.03 {சனிக்கிழமை }

ஆடிவெள்ளி தேடிவரும் நல்லாரநாக் 

கொலுவிருக்கும் பேச்சி ஆடியிலேதான்
தோன்றியாய் ஆரைநகர் அமர் -ஆடிடு 

பாதத்தாலண்டமளந்தோ னன்புத்தங்கை கார்மேக
நாராயணத்தி தண்டை கொஞ்சு பாதம் சரணம் சரணமம்மா,





அனைத்து வளம் படைக்கும் ஆரையம்பதியின் வடபால் பக்தர்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றியருளும் தெய்வம் வல்லளாம் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும்
ஆடித்திங்கள் 11ம் நாள் 27.07.2013  சனிக்கிழமை தொடக்கம் ஆடித்திங்கள் 18ம் நாள் 03.08.2013 சனிக்கிழமை வரை நடாத்துவதற்கு அம்பிகை அருள்பாலித்துள்ளாள் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்

  கிரியாகால நிரலணி
2013.07.27 பிரம்ம முகூர்த்தத்தில் திருக்கதவு திறத்தல்.
2013.07.28 அம்பாள் எழந்தருளப்பண்ணுதல்.
2013.07.29 விஷேட பூசையும்,ஆராதனையும்.
2013.07.30 கும்ப ஊர்வலச் சடங்கு.
2013.07.31 விஷேட பூசையும்,ஆராதனையும்.
2013.08.01 வீரகம்பம் வெட்டுதலும்,பலிச்சடங்கும்.
2013.08.02 பக்திமிகு தீ மிதிப்பு வைபவம்.
2013.08.03 பள்ளயச்சடங்கும்,சமுத்திர தீர்த்தமும்.
2013.08.04 மாலை வைரவர் பூசையும்,திருக்கதவு அடைத்தலும்.


ஆலய பிரதம பூசகர்-
பத்ததி வல்லுனர், சக்திஸ்ரீ சிவத்திரு பூ.மகேந்திரராஜா ஜே.பி.(வைத்தியர்)


ஆரையூர் ஸ்ரீ
பேச்சியம்மன்  ஆலயம்
அனைவரும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்-ஆரையூர் ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பரிபாலன
சபை, ஆரையம்பதி-02


அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.