மட்டக்களப்பு - ஆரையம்பதி அருள்மிகு ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013


மட்டக்களப்பு - ஆரையம்பதி
அருள்மிகு ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய
விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013


பேச்சி அன்னை உன்னையே - உயிர்
மூச்சியாக எண்ணியே ஆண்டு தோறும்
ஆடி வெள்ளி தேடியே ஒன்றி மக்கள்
கோடி கூடித் தீ மிதிக்க வாறோமம்மா
நாடி வரும் எங்களை - முன்னே
ஓடி வந்து ஆதரித்துக் காருமம்மா
ஆரை நகர் வீற்றிருந்து நன்றாய் -என்று
மூரைக் கோலோட்சும் கோலவிழிப் பேச்சி அம்மா.




ஆரம்பம் - 2013.07.27 நிறைவு - 2013.08.03
{சனிக்கிழமை }       {சனிக்கிழமை }

கிரியாகால நிரலணி
2013.07.27 பிர
ம்முகூர்த்தத்தில் திருக்கதவு திறத்தல்.
2013.07.28 அம்பாள் எழந்தருளப்பண்ணுதல்.
2013.07.29 விஷேட பூசையும் ஆராதனையும்.
2013.07.30 கும்ப ஊர்வலச் சடங்கு.
2013.07.31 விஷேட பூசையும் ஆராதனையும்.
2013.08.01 வீரகம்பம் வெட்டுதலும்,பலுச்சடங்கும்.
2013.08.02 பக்திமிகு தீ மிதிப்பு வைபவம்.
2013.08.03 பள்ளயச்சடங்கும்,ச
முத்திர தீர்த்தமும்.
2013.08.04 மாலை வைரவர்
பூசையும்,திருக்கதவு அடைத்தலும். ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் அனைவரும் ஆலயம் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்-ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்பரிபாலன சபை ஆரையம்பதி-02


அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.


அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.

மட்டக்களப்பு - ஆரையம்பதி செங்குந்தர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013

மட்டக்களப்பு - ஆரையம்பதி செங்குந்தர்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய
விஜய வருடாந்த உற்சவப்
பெருவிழா ~ 2013


ஆரம்பம் - 2013.06.16
{ஞாயிற்றுக்கிழமை } நிறைவு - 2013.06.23 {ஞாயிற்றுக்கிழமை }
ஆரையம்பதி செங்குந்தர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 2013ஆம் 
விஜய வருட வருடாந்த உற்சவப் பெருவிழா
ஆனித்திங்கள் 2ம் நாள்(2013.06.16)செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஆனித்திங்கள் 8ம் நாள்(2013.06.23)செவ்வாய்க்கிழமை பக்திமிகு திருக்குளிர்த்தி வைபவம் இடம்பெற்று சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் உற்சவவிழா இனிதே நிறைவுறும்.
2012.06.19/20 அம்பாளின் தேர் ,கப்பல் இடம்பெறும்
மெய்யடியார்களே இத்தருணம் யாவரும் அம்பாளின் அலங்கார பூசையில் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன்அருள் பெற்றேக அனைவரும் ஆலயம் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்-செங்குந்தர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பரிபாலன சபை ஆரையம்பதி-02



அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.

மட்டக்களப்பு - ஆரையம்பதி வம்மிக்கேணி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013

மட்டக்களப்பு - ஆரையம்பதி வம்மிக்கேணி
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய
விஜய வருடாந்த உற்சவப்
பெருவிழா ~ 2013



ஆரம்பம் - 2013.06.16
{ஞாயிற்றுக்கிழமை} நிறைவு - 2013.06.23 {ஞாயிற்றுக்கிழமை }  

... ஆரையம்பதி வ
ம்மிக்கேணி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 2013ஆம் விஜய  வருட வருடாந்த உற்சவப் பெருவிழா ஆனித்திங்கள்  2ம் நாள்(2013.06.16)ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஆனித்திங்கள் 8ம் நாள்(2013.06.23)ஞாயிற்றுக்கிழமை பக்திமிகு திருக்குளிர்த்தி வைபவம் இடம்பெற்று சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் உற்சவவிழா இனிதே நிறைவுறும்.
21-06-2013
வெள்ளிக்கிழமை பிற்பகல் மடைப்பெட்டி எடுத்தல் வைபவம் இடம்பெறும்
மெய்யடியார்களே இத்தருணம் யாவரும் அம்பாளின் அலங்கார பூசையில் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன்அருள் பெற்றேக அனைவரும் ஆலயம் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்- ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பரிபாலன சபை ஆரையம்பதி-02


அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.